ஈபிள் கோபுரத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் - வெளியேற்றப்பட்ட சுற்றுலாப்பயணிகள்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள ஈபிள் கோபுரத்தில் வெடிகுண்டு இருப்பதாக வெளிவந்த தகவலால் பதற்ற நிலை ஒன்று உருவாகியுள்ளது.
1889 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இந்த ஈபிள் கோபிரமானது பிரான்ஸின் அடையாளமாகவும் மிக முக்கிய சுற்றுலாதளமாகவும் இருந்து வருகின்றது.
இதனை பார்வையிடுவதற்கு நாளுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். இந்த நிலையில், ஈபிள் கோபுரத்தில் வெடிகுண்டு இருப்பதாக நேற்று மிரட்டல் விடுக்கப்பட்டது.
மிரட்டல் போலியானது

இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டு ஈபிள் கோபுரம் முற்றாக மூடப்பட்டது.
பின்னர் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்ட பிறகு அந்த மிரட்டல் போலியானது என்று தெரியவந்தது.
இதையடுத்து இரண்டு மணிநேரம் கழித்து எச்சரிக்கை நீக்கப்பட்டு மீண்டும் ஈபிள் கோபுரம் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டது.
முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே போல் ஈபிள் கோபிரத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.