தமிழர் பகுதியில் வயல் வெள்ளத்தில் சிக்கிய விவசாயி : உலங்குவான்னுர்தி மூலம் மீட்பு
மட்டக்களப்பில் (Batticaloa) வேளாண்மை நடவடிக்கைக்கு சென்ற 7 விவசாயிகள் அந்த பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஒரு விவசாயியை விமானப்படையினர் உலங்குவான்னுர்தி மூலம் மீட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை (25.11.2024) வேளாண்மை நடவடிக்கைகளுக்காக புல்லுமலை தம்பட்டி வயல் பிரதேசத்தில் 3 விவசாயிகளும் மாவடி ஓடை வண்ணாத்திஆறு வயல் பிரதேசத்தில் 4 பேர் உட்பட 7 விவசாயிகள் சென்றிருந்தனர்.
இந்த நிலையில் தொடர் கடும் மழை காரணமாக அந்தபகுதியிலுள்ள குளங்களின் வான்கதவு திறக்கப்பட்டதையடுத்து வயல் நிலங்கள் வெள்ளத்தில் முழ்கியது.
தொடரும் கடும் மழை
இந்நிலையில் அந்த விவசாயிகள் தமது வாடிகளில் இருந்து வீடுகளுக்கு வெளியேறமுடியாமல் சிக்குண்டுள்ளனர்.
இவ்வாறு சிக்குண்டவர்களை மீட்கும் நடவடிக்கையினை இன்றையதினம் விமானப்படையினர் மலைவெட்டுவான் வயல் பகுதியில் சிக்குண்ட ஒருவரை உலங்குவானுர்தி மூலம் மீட்டெடுத்துள்ளனர்.
அதேவேளை கொக்கச்சிமடு பகுதியில் வெள்ளத்தில் சிக்குண்டுள்ள 4 குடும்பங்களை மீட்பதற்கு உலங்குவானுர்தியிலிருந்து கயிறு இறக்கப்பட்டபோதும் அவர்கள் கயிற்ல் ஏறும் பயத்தினால் ஏறமறுத்துள்தனால் அவர்களை மீடகமுடியாமல் உலங்குவானுர்தி திரும்பியுள்ளனர்.
அதேவேளை புல்லுமலை தம்பிட்டி வயல் பிரதேசத்தில் சிக்குண்ட 3 பேரில் ஒருவர் வெள்ளத்தில் நீந்தி கரையேறியதுடன் ஏனைய இருவரையும் காவல்துறையினர் மீட்டுள்ளதுடன் சிக்குண்ட 4 குடும்பங்களையும் படகின் மூலம் மிட்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |