விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்
விதை நெல் உற்பத்தி செய்யும் பண்ணைகளில் மேற்கொள்ளப்படும் நெற்செய்கைக்கு காப்புறுதித் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விவசாயிகளிடமிருந்து கிடைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் இந்தக் காப்புறுதித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை (Agricultural and agrarian insurance board) தெரிவித்துள்ளது.
விதை நெற்செய்கைக்கு வெள்ளம், வறட்சி, நோய்கள், பூச்சித் தாக்குதல்கள், இயற்கைப் பேரழிவுகள் மற்றும் காட்டு யானைகளினால் ஏற்படும் சேதங்களுக்கு இந்த காப்பீடு திட்டம் வழங்கப்படுகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
180,000 ரூபாய் இழப்பீடு
அதன்படி, ஒரு ஏக்கர் செய்கைக்காக ஒரு போகத்திற்கு 13,600 ரூபா தவணைக்கு செலுத்துவதன் ஊடாக ஒரு ஏக்கருக்கு 180,000 ரூபாய் இழப்பீடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை குறிப்பிடுகின்றது.

இந்த விதை நெல் பண்ணைகளுக்கு காப்புறுதி பாதுகாப்புப் பெற வேண்டுமானால், அவை விவசாயத் திணைக்களத்தின் விதைப் பதிவுச் சேவையில் கட்டாயம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் அச் சபை வலியுறுத்துகிறது.
விதை நெல் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதன் மூலம் விவசாயிகளைச் செய்கையில் தக்கவைத்துக்கொள்வதே இதன் பிரதான நோக்கம் என்றும் விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |