கோட்டாபயவுக்கு கொடும்பாவி கட்டி தாக்குதல் நடத்திய விவசாயிகள்!
Protest
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
SriLanka
Anurathapura
By Chanakyan
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் (Gotabaya Rajapaksa) கொடும்பாவி மீது விவசாயிகள் சீற்றம் கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அநுராதபுரம் - பதவியா பிரதேசத்தில் நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதற்கு முன்னதாக அநுராதபுரம் - ரம்பேவ பிரதேசத்தில் இடம்பெற்ற விவசாயிகளின் போராட்டத்தில் நபர் ஒருவர் சிறிலங்காப் பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) போன்று வேடம் அணிந்து வந்த சந்தர்ப்பத்தில் விவசாயிகள் குறித்த நபரை அடித்து விரட்டிய சம்பவமும் நடைபெற்றிருந்தது.
இரசாயனப் உரம் மீதான தடையை நீக்கும்படி கோரி இன்றைய தினமும் பல இடங்களிலும் விவசாயிகள் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்து முன்னெடுத்துவருகின்றனர்.
இது போன்ற மேலதிக தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய தலைப்புச் செய்திகள்,