அரசாங்கத்திற்கு பாடம் புகட்டிய விவசாயிகள் -வெளிவந்த தகவல்
விவசாயிகள் அரசாங்கத்திற்கு பாடம் புகட்டியுள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா(Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.
இரசாயன உரங்களை மீண்டும் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசாங்கம் ஏனைய விடயங்களைப் போன்று உரத்தடையை அமுல்படுத்தி தற்போதுஅதனை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொன்சேகா சுட்டிக்காட்டினார்.
இதேவேளை உரத்தடை இறக்குமதி தொடர்பில் நெல் மற்றும் மரக்கறி உள்ளிட்ட பெரும்போக பயிர்ச் செய்கைக்கான இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய இதுவரை தீர்மானம் எட்டப்படவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage)தெரிவித்த நிலையில்
உரிய தரத்திலான இரசாயன உரம் மற்றும் கிருமி நாசினிகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் கே ஜயசிங்க (Prof. Udit K. Jayasinghe)தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.