கனடாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ -அவசர நிலை பிரகடனம்
Canada
Wildfire
By Jaso
கனடா நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் பரவலாக காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருவதை அடுத்து நகரமொன்றில் அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக கோடை காலத்தில் ஏற்படும் காட்டுத்தீயை விட இந்தாண்டு பத்து மடங்கு வேகமாக தீ ஏற்பட்டுள்ளது. இதுவரை 67 இலட்சம் ஏக்கர் காடுகள் தீயில் கருகி சாம்பலாகியுள்ளன.
13 மாகாணங்களில் காட்டுத்தீ

அந்நாட்டின் 13 மாகாணங்களிலும் 213 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாகவும், 29 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் கனேடிய அரசு தெரிவித்துள்ளது.
கூபெக் நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு 10 ஆயிரம் பேர் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்