அம்பாறையில் தந்தையால் மகளுக்கு நேர்ந்த கொடூரம்: தாய் அளித்த முறைப்பாடு
அம்பாறையில் சிறுமி ஒருவர் தந்தையால் தகாத முறைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை காவல் பிரிவில் புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியே இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட குறித்த சிறுமிக்கு 14 வயது என தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட மாணவி
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாக இருக்கும் குறித்த சிறுமியை அவரது தந்தை தொடர்ச்சியாக தகாத முறைக்கு உட்படுத்தி வந்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டை பெரிய நீலாவணை காவல்துறையினருக்கு நேற்று (15) பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் முன்வைத்துள்ளார்.
இதையடுத்து, சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட மாணவியை கல்முனையில் உள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை கடற்தொழில் மேற்கொண்டு வருவதுடன் மாணவியின் தாயார் நெசவு தொழிலை மேற்கொண்டு வருபவர் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, கைதான சந்தேக நபர் குறித்து மேலதிக விசாரணைகளை பெரிய நீலாவணை சிறுவர் பெண்கள் பிரிவு காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
இதனடிப்படையில் கல்முனை பிராந்திய உதவிப் காவல்துறை அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனைக்கு அமைய பெரிய நீலாவணை காவல் நிலைய பொறுப்பதிகாரியும் மற்றும் காவல்துறை பரிசோதகருமான பி.கஜேந்திரனின் வழிகாட்டுதலில் குறித்த மேலதிக விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |