தனது 08 வயது மகனுக்கு வாயில் சூடு வைத்த தந்தை கைது
மட்ட்க்களப்பு முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் 8 வயது சிறுவன் பாடசாலை வகுப்பறையில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி வருவதாக ஆசிரியர், பெற்றோரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த சிறுவனான மகனுக்கு வாயில் கம்பியால் சூடு வைத்த தந்தையை இன்று(28) வியாழக்கிழமை (28) கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
வகுப்பறையில் தகாத வார்த்தை : பெற்றோரிடம் முறைப்பாடு
குறித்த பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் 3ம் ஆண்டில் கல்வி கற்று வரும் 8 வயது சிறுவன் பாடசாலை வகுப்பறையில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி வந்துள்ளார்.

இது தொடர்பாக சிறுவனின் பெற்றோரிடம் ஆசிரியர் முறைப்பாடு செய்ததையடுத்து சிறுவனின் தந்தையார் மகன் மீது கோபங் கொண்டு கடந்த செவ்வாய்க்கிழமை (26) மகனை பிடித்து இரும்பு கம்பியை சூடாக்கி அவரது வாயில் செங்குத்தாக சூடு வைத்துள்ளார்.
சூடு வைத்த தந்தை கைது
இவ்வாறு சிறுவனுக்கு நடந்த கொடூரம் அந்த பகுதி கிராம உத்தியோகத்தருக்கு தெரிய வந்த நிலையில் அவர் காவல்துறைக்கு இன்று வியாழக்கிழமை (28) முறைப்பாடு செய்தார்.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் சிறுவனுக்கு சூடு வைத்த தந்தையை கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுவனை வைத்தியசாலையில் அனுமதித்தனர் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை சந்திவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |