மகனின் சாதாரண தர பரீட்சைக்காக தாயின் மரணத்தை மறைத்த தந்தை: தென்னிலங்கையில் துயரம்!
தென்னிலங்கையில் மகனுக்கு சாதாரண தர பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருந்ததால் பரீட்சை முடியும் வரை தாயின் மரணத்தை மறைத்த தந்தையொருவர் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 12ஆம் திகதி குறித்த தாய் குடும்ப உறுப்பினர்களுடன் மதிய உணவுக்கு பின் ஐஸ்கிரீம் சாப்பிட்டுள்ளார்.
இதன்போது திடீரென ஏற்பட்ட இருமல் காரணமாக அவர் மயங்கி விழுந்த நிலையில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த தாய் உயிரிழந்துள்ளார்.
தாய் இறந்தபோது, அவரது மகனுக்கு க.பொ.த சாதாரண தர பரீட்சை நிறைவடைவதற்கு இன்னும் 4 நாட்களே இருந்துள்ளன.
தாயின் இறப்பைத் தாங்க முடியாமல் மகன் பரீட்சை எழுதமாட்டார் என்ற அச்சத்தில் தந்தை மற்றும் உறவினர்கள் மகனிடம் அந்த செய்தியை மறைத்துள்ளனர்.
இந்த நிலையில், மகனின் பரீட்சை நிறைவடைந்துள்ளதுடன், அதுவரை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த சடலம் நேற்று (17) காலியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |