யாழில் இளம் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல்
யாழில் (Jaffna) குடும்பஸ்தர் ஒருவர் இனம்தெரியாத நபர்களினால் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த சம்பவம் குரும்பசிட்டி, தெல்லிப்பளை வைத்தியசாலை வீதியில் இன்று (11) காலை இடம்பெற்றுள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான தர்மராசா தினேஷ்குமார் (வயது 32) என்பவரே இந்த சம்பவத்தில் படுகாமடைந்துள்ளார்.
வாள்வெட்டு சம்பவம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட குழு இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
இந்த வாள்வெட்டு சம்பவத்தினை மேற்கொண்டு விட்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பலாலி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் விசாரணை
வாள்வெட்டில் படுகாயமடைந்தவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பலாலி காவல்துறையினர் மற்றும் அச்சுவேலி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
