கடற்றொழில் அமைச்சரின் ஊழல்களை சபையில் அம்பலப்படுத்திய அர்ச்சுனா எம்.பி
அண்மையில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் (Ramalingam Chandrasekar) அட்டை பண்ணை தொடர்பில் தெரிவித்திருந்த கருத்து பாரிய சர்சைக்குள்ளாகி இருந்தது.
யாழ்ப்பாணம் (Jaffna)- குருநகர் பகுதியில் கடல் அட்டைப் பண்ணையாளர்களுடனான கலந்துரையாடலின் போது அவர் ஒரு விடயத்தை முன்வைத்திருந்தார்.
அதாவது, கடல் அட்டைப் பண்ணை எல்லோருக்கும் வழங்குவோம் பயப்பட வேண்டாம் எனவும் நீங்கள் ஒன்றரை ஏக்கர் பண்ணை வைத்திருந்தால் அரை ஏக்கருக்கு அரசுங்கத்திற்கு பணம் கட்டினால் போதும் எனவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இது குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பிய நிலையில், சட்ட விரோதமாக கடல் அட்டை பண்ணைகளை மேற்கொண்டு வருகின்றவர்களை பாதுகாக்கும் பொருட்டு அவர் கருத்து தெரிவித்திருப்பதாக மக்கள் குற்றம் சாட்டி விமர்சித்திருந்தனர்.
இவ்வாறான பின்னணியில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ( Ramanathan Archchuna) இது தொடர்பில் அமைச்சரிடம் பலதரப்பட்ட கேள்விகளை முன்வைத்துள்ளார்.
குறித்த விடயங்களை இன்றைய (11) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நீங்கள் அட்டை பண்ணை தொடர்பில் கருத்து தெரிவித்திருந்த காணொளி தற்போத என்னிடம் உள்ளது.
இதனை நான் நாடாளுமன்றத்தில் சமர்பித்து நீங்கள் ஊழல் செய்கின்றீர்கள் என்பதனை நிரூபித்தால் உங்களால் இந்த அமைச்சு பதவியை துறக்க முடியுமா” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், வடக்கு கடற்றொழில் அபிவிருத்தி, கடற்றொழில் அதிகாரிகளின் திடீர் இடமாற்றம் மற்றும் பலதரப்பட் விடயம் தொடர்பில் அவர் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
