சிறுமி ஒருவரை பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாகிய தந்தைக்கு 40 ஆண்டுகள் கடுங்காவல் சிறை
வவுனியாவில் சிறுமி ஒருவரை(13) பாலியல் அத்துமீறலுக்கு உள்ளக்கிய தந்தைக்கு 40 வருட கால கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், வவுனியாவில் இக்குற்றச்செயல் இடம்பெற்றுள்ளது. சம்பவம் நடந்த போது 13 வயதாக இருந்த பாதிக்கப்பட்ட சிறுமி இருந்துள்ளார்.
சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டு
இது தொடர்பான வழக்கின் குற்றச்சாட்டுப் பத்திரம் 2024ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதால், எதிரி குற்றவாளியாகக் காணப்பட்டு தீர்ப்பு நேற்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற காலத்தில் குறித்த சிறுமி தந்தையின் பாதுகாப்பிலே வசித்து வந்துள்ள நிலையில் இரண்டு சந்தர்ப்பங்களில் இந்தக் குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளன.
இரு சந்தர்ப்பங்களிலும் தந்தை போதைப்பொருள் உபயோகித்து விட்டு வீட்டிலே வைத்து குறித்த குற்றச்செயல்களைப் புரிந்துள்ளார். இந்த குற்றசெயயல் குறித்த சிறுமி கருத்தரித்ததுடன், மகப்பேறு மருத்துவர், மனநல வைத்தியர், சட்ட வைத்திய அதிகாரி கொண்ட குழாம் சிறுமியைப் பரிசோதித்து அவருக்கு ஒரு குழந்தையைத் தாங்கக்கூடிய உடல் வலு, மனத்திடம் மற்றும் முதிர்ச்சி இல்லை என்றதன் அடிப்படையில் சட்ட ரீதியான கருக்கலைப்பை மேற்கொண்டனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் வயது, சொந்தத் தந்தையாலேயே இக்குற்றச்செயல் புரியப்பட்டுள்ளமை, சிறுமிக்கு ஏற்பட்ட கடுமையான உடல் மற்றும் உளவியல் பாதிப்புகள், மேலும் இனி வரும் காலங்களில் இப்படியானதொரு குற்றம் நடைபெறாமல் தடுக்கும் நோக்கம் ஆகியவற்றை நீதிமன்றம் கருத்திலே கொண்டு கடுமையான தண்டனையை வழங்கியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |