முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் பலி
Sri Lanka Police
Sri Lankan Peoples
Hospitals in Sri Lanka
By Kathirpriya
மீகலேவ காவல் பிரிவிற்குட்பட்ட கலங்குட்டிவ கால்வாயில் நீராடச் சென்ற பெண் ஒருவரை முதலை ஒன்று இழுத்துச் சென்றுள்ளது.
குறித்த பெண் நேற்று முன் தினம் (29) மாலை கால்வாயில் நீராடச் சென்ற போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பின்னர் பிரதேசவாசிகள் முதலையிடம் இருந்து பெண்ணை மீட்டு தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சிகிச்சை பலனின்றி
வைத்தியசாலையில் தீவிரமான சிகிச்சை முன்னெடுக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
லிகொலவெவ, உஸ்கலசியம்பலங்காமுவ பிரதேசத்தில் வசித்த 66 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.. |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி