விவசாயிகளுக்கு கிடைக்கவுள்ள மானியம் : அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி
இம்முறை வரவு - செலவு திட்டத்தில் விவசாயிகளுக்கான பல்வேறு நிவாரணங்கள் மற்றும் மானியங்கள் வழங்க முன்மொழியப்பட்டுள்ளதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே (Nalin Hewage) தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) நாளைய தினம் (17.02.2025) காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட உரை ஆற்ற உள்ளார்.
நிவாரணங்கள்
இந்நிலையில், விவசாயிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இந்த வரவு- செலவு திட்டத்தில் நிவாரணங்கள் மற்றும் மானியங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த ஆண்டு பாதீட்டில் வரிச் சலுகைகள் மற்றும் எரிபொருள் நிவாரணங்களை வழங்குமாறு கடற்தொழிலாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதனால் அவர்களின் தொழிலை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தொடர்ந்து முன்னெடுக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், மீன்பிடி உபகரணங்களின் விலை உயர்வின் காரணமாக மீன்பிடித் தொழிலைத் தொடர்வதில் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
