விவசாயிகளுக்கு அநுர வெளியிட்ட நற்செய்தி
இந்த வருட சிறுபோகத்தின் போது நெல் விவசாயத்திற்கு மட்டுமல்ல மற்றைய பயிர்களுக்கும் உர மானியங்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
பெலியத்த பகுதியில் இன்று (29.03.2025) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கஒண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் ஜனாதிபதி தெரிவிக்கையில் , "மூன்று வாரங்களுக்கு முன்பு அமைச்சரவையில் ஒரு முடிவை எடுத்தோம், இதுவரை நெல் விவசாயத்திற்கு மட்டுமே உர மானியங்கள் வழங்கப்பட்டு வந்தன.
உர மானியம்
ஆனால் நெல் வயல்களில் பயிரிடப்படும் கூடுதல் பயிர்களுக்கும் உர மானியங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
பிணையம் இல்லாமல் கடன் பெறக்கூடிய ஒரு முறையினை உருவாக்குவதாக நாங்கள் உறுதியளித்தோம், இப்போது அதை உருவாக்கியுள்ளோம்.
ஒரு இளம் தொழில்முனைவோர் தங்கள் தொழிலைக் காட்டி கைத்தொழில் அமைச்சிடம் இருந்து சான்றிதழைப் பெறலாம், அதன்பின்னர் பிணையம் இல்லாமல் கடன் பெற்று புதிய தொழிலைத் தொடங்க முடியும் என குறிப்பிட்டுள்ளார். "என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்
