சிறிலங்கா வேண்டாம் அமெரிக்காவிற்கே வந்து விடுங்கள்! கோட்டாபயவின் மகன் விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை
அரசாங்கத்தையும் ஆட்சியையும் சரிவர நடத்திச் செல்ல முடியாதவாறு குடும்ப அங்கத்தவர்களே காலைப்பிடித்து இழுத்தால் ஆட்சியை ஒப்புக்கொடுத்துவிட்டு மீண்டும் அமெரிக்காவுக்கே வந்துவிடும்படியும் மனோஜ் ராஜபக்ச (Manoj Rajapaksa) தந்தையிடம் கோரியுள்ளார்.
இது தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர்ந்தும் அந்த செய்தியில்,
சிறிலங்கா அரசாங்கத்திற்குள் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைகள் குறித்து அவதானம் செலுத்தியுள்ள சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவின் (Gotabaya Rajapaksa) புதல்வரான மனோஜ் ராஜபக்ச (Manoj Rajapaksa) தனது தந்தையிடம் விசேட கோரிக்கை முன்வைத்துள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய, தற்போது அவரது மகனது குடும்பத்தாருடன் இருக்கின்றார். இன்னும் ஓரிரு நாட்களில் அவர் நாடு திரும்பவுள்ளார்.
இந்நிலையில் அவர் அமெரிக்கா சென்ற நாளிலிருந்து அவரது மகன் மனோஜ் ராஜபக்ச (Manoj Rajapaksa) விசேட வேண்டுகோளினை முன்வைத்து வருவதாக அறியமுடிகின்றது என அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.