யாழில் நிமோனியா காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழப்பு
By Independent Writer
யாழில் (Jaffna) நிமோனியா காய்ச்சல் காரணமாக முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பலாலி தெற்கு, வசாவிளான் பகுதியைச் சேர்ந்த கா.கிட்டுணன் (வயது 75) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கடந்த சில தினங்களாக உடல் சுகயீனமடைந்த நிலையில் இருந்துள்ளார்.
மரண விசாரணை
இந்நிலையில் 22ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
நிமோனியா காய்ச்சல் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி