பேருந்து கட்டண அதிகரிப்பு -இன்று வரவுள்ள அறிவிப்பு
today
bus
fare-revision
By Jaso
எரிபொருள் விலை பெருமளவில் அதிகரித்த நிலையில் பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்படவேண்டுமென பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன்படி பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பிலான இறுதித் தீர்மானம் இன்று (29) எட்டப்படவுள்ளது. பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பிலான அறிக்கை, போக்குவரத்து அமைச்சின் செயலாளரிடம் நேற்றைய தினம் கையளிக்கப்பட்டது.
இதன்படி, புதிய கட்டண திருத்தம் தொடர்பிலான அறிவிப்பு இன்று வெளியாகும் என போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது.
ஆகக் குறைந்த பேருந்து கட்டணமாக 20 ரூபாவை நிர்ணயிக்குமாறு, பேருந்து சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே, இன்று இந்த தீர்மானம் வெளியாகவுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி