சுசில் பிரேமஜயந்தவுக்கு எதிராக இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளப்போகும் பிரதமர்
சுசில் பிரேமஜயந்தவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இறுதி தீர்மானத்தை கட்சி தலைவர், பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) மேற்கொள்வாரென சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்று இந்த வாரம் இடம்பெறவுள்ளது.
இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த, இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் கட்சி என்ற ரீதியில் சுசில் பிரேமஜயந்த தொடர்பான இறுதி தீர்மானத்தை சிறிலங்கா பொதுஜன பெரமுன இதுவரையில் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
கட்சியின் தலைவர் முன்னாள் அரசதலைவர் மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.