மின்கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதி முடிவு விரைவில்
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பிரேரணை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வரும் 28 ஆம் திகதி ஒன்றுகூடவுள்ளது.
மேலும் மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான யோசனை தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு
இலங்கை மின்சார சபையின் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான யோசனை கடந்த 22 ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த திருத்தத்தில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
கடந்த வருடம் ஒக்டோபரில், உள்நாட்டு மற்றும் மத வழிபாட்டுத் தலங்களுக்கு 18%, தொழிற்சாலைகள் மற்றும் ஹோட்டல்களுக்கு 12%, அரசு நிறுவனங்களுக்கு 24% ஆக மின் கட்டணம்அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |