மின்சார கட்டண உயர்வு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு
மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பாக இலங்கை மின்சார சபை(CEB) சமர்ப்பித்த முன்மொழிவு குறித்த தனது முடிவை இந்த மாதத்தின் இரண்டாவது வார இறுதிக்குள் வெளியிடுவதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணத்தில் 6.8 சதவீத அதிகரிப்பை முன்மொழிந்து மின்சார சபை கடந்த செப்டம்பரில் ஆணைக்குழுவுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி, கிழக்கு மாகாணத்தில் வாய்மொழி பொதுக் கருத்து கணிப்பு காலத்தை ஆணைக்குழு கடந்த மாதம் 18 ஆம் திகதி தொடங்கியது.
மின்சார கட்டண திருத்தம்
நாட்டின் 8 மாகாணங்களை உள்ளடக்கிய பொதுமக்களின் கருத்துகள் இதுவரை பெறப்பட்டுள்ளன, அத்துடன் அவற்றில் 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர் என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மேற்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு பொதுமக்களின் கருத்துகளுக்கான இறுதி அமர்வு 8 ஆம் திகதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தொடர்புடைய பொதுமக்களின் கருத்துக்களை ஆணைக்குழு ஆராய்ந்து வருகின்றதோடு, அதில் மின்சார சபை மின்சார உற்பத்திக்கான மதிப்பிடப்பட்ட செலவு, மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து எரிபொருள் வாங்குவதற்கான செலவு, விநியோக செலவு மற்றும் கடன்களை திருப்பிச் செலுத்த மின்சார கட்டணங்களிலிருந்து பெறப்பட்ட நிதி ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்படுதவாக கூறப்படுகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில், அனைத்து புள்ளிகளையும் பரிசீலித்த பிறகு, மின்சார கட்டண திருத்தம் குறித்த இறுதி அறிக்கை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
