தீயுடன் சங்கமமான அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்
சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவரும் அரசியல் ஆய்வாளருமான சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கத்தின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.
பிரபல அரசியல் ஆய்வாளரும், மூத்த சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவரும், ஓய்வுநிலை ஆசிரியருமான சி.அ. யோதிலிங்கம் கடந்த வெள்ளிக்கிழமை தனது 70ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் காலமானார்
வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட கட்டியை அகற்றுவதற்காக, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , கடந்த வியாழக்கிழமை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
மயானத்தில் தகனம்
சுமார் எட்டு மணித்தியாலங்களுக்கு மேலாக நடைபெற்ற சத்திர சிகிச்சையை தொடர்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மறுநாள் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது புகழுடலுக்கு அரசியல்வாதிகள் , சமூக செயற்பாட்டளர்கள் , பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வந்த நிலையில் இறுதி கிரியைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை, குப்பிழான் தெற்கு, வீரமனை பகுதியில் அமைந்துள்ள அவரது சகோதரியின் இல்லத்தில் இடம்பெற்றது,
அவரது புகழுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, குப்பிழான் காடாகடம்பை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |