தொடரப்போகும் நிதி நெருக்கடியும் திசை மாறிய புவிசார் அரசியலும்

Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Economy of Sri Lanka
By Kiruththikan Aug 10, 2022 10:36 AM GMT
Kiruththikan

Kiruththikan

in கட்டுரை
Report
Courtesy: அ.நிக்ஸன்

சர்வதேச நாணய நிதியுத்துடன் ஒப்பந்தங்களைச் செய்வதற்கு இலங்கையில் உள்ள அமெரிக்க - இந்திய எதிர்ப்புச் சக்திகள் இடமளிக்குமா என்பதும் சந்தேகமே. உள்ளக வருமானங்களையும் ஏற்றுமதி வருமானங்களையும் அதிகரிக்கக்கூடிய சிங்கள இனவாதமற்ற பொருளாதார வலுவும், செயற்திறனும் இலங்கையிடம் இல்லை

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அதிபராகப் பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஐரோப்பிய மற்றும் மேற்குலக நாடுகளிடம் இருந்து தொடர்ச்சியாகப் பெருமளவு நிதியுதவிகளைப் பெறக்கூடிய சூழல் அருகிக் கொண்டே செல்கின்றது.

ரஸ்யா - உக்ரைன் போரினால், தற்போது பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சர்வதேச நாடுகள் குறிப்பாக ரஷியாவுக்கு எதிரான நாடுகள் உக்ரைன் நாட்டை எப்படி மீளக் கட்டியெழுப்புவது என்பதிலேயே கூடுதல் கவனம் செலுத்தியுள்ளன. ரஸ்யாவுக்கு எதிரான போருக்கு உக்ரைன் நாட்டுக்கு உதவியளிப்பதிலும் இந்த நாடுகளின் கவனம் மேலோங்கியுள்ளது.

புவிசார் அரசியல் போட்டி

தொடரப்போகும் நிதி நெருக்கடியும் திசை மாறிய புவிசார் அரசியலும் | Financial Crisis And Geopolitics

ரஸ்யாவைப் பலவீனமாக்க வேண்டுமென்ற புவிசார் அரசியல் போட்டியே இதற்குக் காரணம் எனலாம்.உக்ரைன், இலங்கைபோன்று பொருளாதார அபிவிருத்தியடையாத நாடு அல்ல. பணவீக்கம் அளவுக்கு அதிகமாக உயருகின்ற நாடும் அல்ல. ஆனால் ரஸ்யா போர் தொடுத்த பின்னரான சூழலில் உக்ரைன் பல வழிகளிலும் அழிவடைந்துள்ளது. அதன் இராணுவக் கட்டமைப்புகளும் சிதைவடைந்துள்ளன. இதனால் உக்ரைன் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமென்ற நோக்கில் ஐரோப்பிய மற்றும் மேற்குலக நாடுகள் தற்போது திட்டங்களை வகுக்க ஆரம்பித்துள்ளன. பெருமளவு நிதிகளையும் இந்த நாடுகள் ஒதுக்குகின்றன. ஜி-7 மாநாட்டில் இது குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அத்துடன் அந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டிலும் உக்ரைனுக்கு உதவியளிப்பது குறித்துத் தொடர்ச்சியாகப் பேசப்படுகின்றது.

இந்த நிலையிலேயே இலங்கையில் கடந்த மார்ச் மாதம் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. தற்போதும் பொருளாதார நெருக்கடி தொடருவதால், இலங்கைக்கு நிதியுதவி வழங்க வேண்டுமென ஆரம்பத்தில் பரிந்துரைத்த ஐரோப்பிய மற்றும் மேற்குலக நாடுகள், ரணில் விக்ரமசிங்க அதிபராக பதவியேற்ற பின்னரான சூழலிலும், இலங்கையின் ஸ்திரமற்ற அரசியல் நிலைமைகளைக் காரணம் கூறி நிதி வழங்குவதை இழுத்தடிக்கின்றன.

இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் இலங்கை தமக்கேற்றவாறு முக்கியமான தளமாக இருக்க வேண்டுமென்பதே அமெரிக்கா - இந்தியா போன்ற நாடுகளின் நீண்டகால விருப்பம். அதற்காகவே 2009 இல் ஈழப்போராட்டமும் இல்லாதொழிக்கப்பட்டது.

2009 இன் பின்னரான சூழலில், கொழும்பு போட் சிற்றித் திட்டம், அம்பாந்தோட்டைத் துறைமுக அபிவிருத்தி, மத்தள சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட பல அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிய பேச்சுக்களை சீனா அப்போதைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் ஆரம்பித்தது. இதனால் சீனாவைக் கண்காணிப்பதற்காக அமெரிக்காவினால் 2017 இல் மீளக் கட்டமைக்கப்பட்ட குவாட் அமைப்புக்கு இலங்கை எவ்வாறு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற விடயங்கள் பற்றி தொடர்ச்சியாகவும் விரிவாகவும் ஆராயப்பட்டு வந்தன. அதாவது இலங்கையின் பொருளாதாரப் பலவீனங்கள் சீனாவுக்கான தளமாக மாறிவிடும் என்ற அச்சம் அமெரிக்க - இந்திய அரசுகளுக்கு இருந்தன.

இலங்கை மீது கூடுதல் கரிசனை

தொடரப்போகும் நிதி நெருக்கடியும் திசை மாறிய புவிசார் அரசியலும் | Financial Crisis And Geopolitics

இதன் காரணமாகவே இலங்கை மீது கூடுதல் கரிசனை கொண்டு பெருமளவு நிதிகளும் இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்தன. இந்த ஆண்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது இந்தியா சுமார் நான்கு பில்லியன் டொலர்களை வழங்கியிருந்தது. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற நிதி நிறுவனங்களும் பெருமளவு நிதியை வழங்கியதுடன் எதிர்காலத்திலும் நிதி வழங்குவது தொடர்பான அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுக்களை இலங்கையோடு நடத்தியிருந்தன.

இந்த நிலையிலேயே இலங்கைக்குத் தொடர்ச்சியாக நிதி வழங்குவது குறித்த சிக்கல் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீது அதிக கவனம் செலுத்த வேண்டுமென ஒரு மாதத்திற்கு முன்னர் ஜி-7 நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் முடிவெடுத்திருந்தன. அத்துடன் ரஸ்யாவுக்கு எதிரான போருக்காக உக்ரைன் இராணுவத்துக்குப் பெருமள இராணுவத் தளபாடங்கள், தொழில் நுட்ப உதவிகளை மறைமுகமாக வழங்க வேண்டிய அவசியுமும் உண்டு. இதனால், இலங்கைக்கு உதவி வழங்கும் திட்டங்களில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் மேற்குலக மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளதைச் சர்வதேச நகர்வுகள் காண்பிக்கின்றன.

இலங்கைத்தீவில் சமீபத்தில் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்து அமெரிக்காவும் இந்தியாவும் கம்போடியாவில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளன. ஆசிய நாடுகளின் அமைச்சர்களின் சந்திப்பின் பின்னர் அமெரிக்க ராஜாங்க செயலாளர் அன்ரனி பிளிங்கன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் சென்ற வியாழக்கிழமை கம்போடியாவில் உரையாடியுள்ளனர்.

இலங்கை, மியான்மார் போன்ற நாடுகளைச் சீனா தனக்குரிய தளமாக மாற்ற முற்படும் சூழலில், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் முக்கியமான சவால்கள் இருப்பதை ஏற்றுக் கொண்ட இருவரும் இந்த விடயங்கள் குறித்து விரிவாக பேசுவதற்காக விரைவில் தனித்துவமான சந்திப்பு ஒன்றை நடத்தவும் இணங்கியுள்ளனர். சீனாவின் உளவுக்கப்பல் இலங்கைக்கு வருவது குறித்து இந்தியா ஏற்கனவே ஆட்சேபம் தெரிவித்துள்ள நிலையில், இலங்கை குறித்துப் பேச வேண்டிய விடயங்கள் இருப்பதாக அன்ரனி பிளிங்கன் கம்போடியாவில் செய்தியாளர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தோ – பசுபிக் பாதுகாப்பு

தொடரப்போகும் நிதி நெருக்கடியும் திசை மாறிய புவிசார் அரசியலும் | Financial Crisis And Geopolitics

இந்தோ – பசுபிக் பாதுகாப்புக்காக இலங்கையைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அமெரிக்க - இந்திய அரசுகள் தொடர்ந்து செயற்பட்டு வரும் நிலையில், இலங்கைக்குத் தொடர்ந்து நிதியுதவிகள் வழங்கும் விடயத்தில் இரு நாடுகளும் தயக்கம் காண்பிக்கின்ற சூழல் தற்போது உருவாகியுள்ளது. ஏனெனில், உக்ரெய்ன் நாட்டை நோக்கிய கவனம் மற்றும் புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சமீபகால நகர்வுகள், இலங்கைக்குத் தொடர்ந்து நிதியுதவி வழங்கும் விடயத்தில் அமெரிக்க இந்திய அரசுகளைக் கொஞ்சம் பின்வாங்க வைத்திருக்கின்றன போலும். அத்துடன் தாய்வான் நீரிணைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றமான நிலைமையும், அல் - குவைதா இயக்கத்தின் தலைவர் அய்மான் அல் - ஜவாஹிரி ஆப்கானிஸ்தானில் கடந்த வாரம் கொல்லப்பட்டதனால் அமெரிக்க மக்கள் இலக்குவைத்துத் தாக்கப்படும் ஆபத்துக்கள் இருக்கலாம் என்ற முன் எச்சரிக்கைகள் போன்ற காரணங்களும் மேற்கு நாடுகளின் இலங்கை மீதான கவனத்தைக் குறைத்துள்ளன.

2001 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டவர்தான் அய்மான் அல் - ஜவாஹிரி. ஆகவே அவருடைய மரணத்தின் பின்னரான சூழலில் அமெரிக்கா மீது தாக்குதல்கள் நடத்தப்படக்கூடும் என்ற எச்சரிக்கைகளை அமெரிக்கா தனது மக்களுக்கு சென்ற வியாழக்கிழமை அறிவித்துள்ளது. எனவே இவ்வாறான நிலைமைகளில் இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளுக்கு உதவியளிப்பது பற்றிய சிந்தனைகள் ஐரோப்பிய மற்றும் மேற்குலக நாடுகளுக்கு குறைவடைந்து வருகின்றமை பகிரங்கமாகவே தெரிகின்றது.

ஆப்கானிஸ்தானில் ஆட்சிபுரியும் தலிபான்கள் பாகிஸ்தான் ஊடாக வட இந்திய நிலப் பரப்புக்குள் ஊடுருவலாம் அல்லது தலிபான்களைப் பயன்படுத்தி பாகிஸ்தான் ஊடுருவலாம் என்ற அச்சத்தில் வட இந்தியப் பாதுகாப்பு விடயங்களில் இந்தியாவும் கூடுதல் கவனம் செலுத்துகின்றது. அத்துடன் ரசிய - உக்ரெயன் போரினால் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் பொருளாதார நெருக்கடிகள் நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகின்றன. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவியளித்த பங்களாதேஸ் நாடு கூட சர்வதேச நாணய நிதியத்திடம்; நான்கு பில்லியன் டொலர்களை அவசர உதவியாகச் சில நாட்களுக்கு முன்னர் கோரியுள்ளது.

பாகிஸ்தான், மியன்மார் போன்ற நாடுகளும் சர்வதேச நாணய நிதியத்திடம் கூடுதல் நிதிகளைக் கோரியுள்ளன. உலக வங்கியும் இந்த நாடுகளுக்கு உதவியளிப்பது தொடர்பாகப் பரிசீலித்து வருகின்றது. ஆகவே இதன் பின்புலத்தில், இலங்கைக்கு மாத்திரம் சர்வதேச நாணய நிதியமோ உலக வங்கியோ தேவையான நிதிகளை வழங்க முடியாதவொரு அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேற்படி சர்வதேச நெருக்கடிகள், புவிசார் அரசியல் போட்டிகளில் மேற்குலக மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிக்குண்டுள்ள நிலையில், சீனா மற்றும் ரசியா போன்ற நாடுகளுடன் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் வர்த்தகச் செயற்பாடுகளையும் அதன் மூலம் பெறப்படும் வருமானத்தின் அளவுகளையும் சமநிலையில் வைத்திருக்க வேண்டிய கட்டாயச் சூழலும் உருவாக்கியுள்ளது.

தாய்வான் மீதான சீன அரசின் ஆக்கிரமிப்பு

தொடரப்போகும் நிதி நெருக்கடியும் திசை மாறிய புவிசார் அரசியலும் | Financial Crisis And Geopolitics

சீனா, ரஸ்யா போன்ற நாடுகளுடன் அமெரிக்க போன்ற மேற்குலக நாடுகள் புவிசார் அரசியல் போட்டியில் ஈடுபட்டாலும் அதாவது தாய்வான் மீதான சீன அரசின் ஆக்கிரமிப்புக்கு எதிராக அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் இணைந்து செயற்பட்டாலும், சீனாவுடன் அந்த நாடுகள் மேற்கொண்டு வரும் வர்த்தகச் செயற்பாடுகளை முற்றுமுழுதாகத் துண்டித்துவிட முடியாது. இதேபோன்று ரஸ்யாவின் ஆக்கிரமிப்பில் இருந்து உக்ரைன் நாட்டைக் காப்பாற்ற மேற்குலக மற்றும் ஐரோப்பிய நாடுகள் முற்பட்டாலும், ரஸ்யாவுடன் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் வர்த்தகச் செயற்பாடுகள், வர்த்தகப் பரிமாற்றங்கள் போன்றவற்றை முற்று முழுதாகத் துண்டித்துவிட முடியாது.

ஒன்றுக்கொன்று தங்கி வாழும் பொருளாதார செயற்பாடுகளும், அதற்கான ஒப்பந்தங்களும் செய்யப்பட்டுள்ள நிலைமையில், எடுத்த எடுப்பிலேயே சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகளுடன் அமெரிக்க போன்ற மேற்குலக நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் மற்றும் இந்தியாவும் மோதிவிட முடியாது என்பதே யதார்த்தம். இந்த இடத்திலேதான் இந்தியா மூலம் இலங்கையைக் கையாண்டு வரும் அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக மற்றும் ஐரோப்பிய நாடுகள், இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளுக்கான உடனடித் தீர்வுக்குரிய நிதிகளை வழங்குவதிலும் கடந்த சில நாட்களாகப் புதியதொரு நெருக்கடியைச் சந்தித்திருக்கின்றன.

இதனாலேதான் இலங்கையோடு சர்வதேச நாணய நிதியம் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து அதற்குரியவாறு நிதிகளைப் பெற வேண்டுமென்ற ஆலோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன. ஆனால் அந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கைத்தீவு மக்கள் உடனடியாக நன்மையைப் பெற்றாலும், எதிர்காலத்தில் பல நெருக்கடிகளை எதிர்கொள்ளும் ஆபத்துக்கள் உண்டு. ஒப்பந்தங்களைச் செய்வதற்கு இலங்கையில் உள்ள அமெரிக்க - இந்திய எதிர்ப்புச் சக்திகள் இடமளிக்குமா என்பதும் சந்தேகமே. உள்ளக வருமானங்களையும் ஏற்றுமதி வருமானங்களையும் அதிகரிக்கக்கூடிய சிங்கள இனவாதமற்ற பொருளாதார வலுவும், செயற்திறனும் இலங்கையிடம் இல்லை. ஆகவே ரஸ்யா - சீனாவை நோக்கிய வல்லாதிக்க நாடுகளின் புவிசார் அரசியல் போட்டிக்குள் இலங்கையைச் சிக்கவிடாமல் ரணில் விக்ரமசிங்க தனது இராஜதந்திர உத்தியால் காப்பாற்றுவாரா என்ற கேள்விகளுக்கு மத்தியில் பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை தப்பிக்க முடியாத ஆபத்துக்களே விஞ்சிக் காணப்படுகின்றன.

இதேவேளை, அம்பாந்தோட்டை துறைமுகத்தில் உயர் தொழில்நுட்ப சீன ஆராய்ச்சிக் கப்பலை நிறுத்துவதற்குத் திட்டமிட்டுள்ள இலங்கையின் கோரிக்கையால் கோபமடைந்த சீனா, திங்களன்று இந்தியாவைக் கடுமையாக விமர்சித்தது, பாதுகாப்புக் கவலைகளை மேற்கோள் காட்டி கொழும்புக்கு அழுத்தம் கொடுப்பது அர்த்தமற்றது என்றும் சீனா கூறியுள்ளதாகக் கொழும்பில் இருந்து வெளிவரும் ஊடகம் ஒன்று செய்தி இணையத்தளம் தெரிவித்துள்ளது.

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீசாலை மேற்கு, மீசாலை வடக்கு

25 Oct, 2024
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

21 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Scarborough, Canada

23 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நல்லூர், திருநெல்வேலி, London, United Kingdom

13 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Zürich, Switzerland

20 Nov, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், Harrow, United Kingdom

14 Nov, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, வவுனியா, Milton Keynes, United Kingdom

17 Nov, 2024
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Krefeld, Germany

17 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், சுதுமலை, கொழும்பு, West Drayton, United Kingdom

09 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை

23 Nov, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, Aulnay-sous-Bois, France

06 Dec, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

24 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, மட்டக்களப்பு, கல்முனை, சுன்னாகம், வெள்ளவத்தை, கனடா, Canada

30 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், மெல்போன், Australia

27 Nov, 2021
மரண அறிவித்தல்

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany

23 Nov, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் தங்கோடை, அளவெட்டி, London, United Kingdom

04 Dec, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை சிறுவிளான், பிரான்ஸ், France

23 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, தெல்லிப்பழை

23 Oct, 2024
மரண அறிவித்தல்

உடுவில், பிரான்ஸ், France, Ajax, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, Aachen, Germany, Herzogenrath, Germany

20 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் கிழக்கு, Jaffna, Ajax, Canada

21 Nov, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Scarborough, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், புத்தளம், Frederikssund, Denmark, Gormley, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்

வவுனியா, மட்டுவில் தெற்கு, Bobigny, France

15 Nov, 2024
45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மயிலிட்டி, பருத்தித்துறை, உரும்பிராய், வல்வெட்டித்துறை

12 Oct, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், சுவிஸ், Switzerland

21 Nov, 2007
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada

21 Nov, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், உசன்

19 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை, வவுனியா கூமாங்குளம்

26 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Harrow, United Kingdom

16 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

அச்சுவேலி, கரவெட்டி, Melbourne, Australia

16 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், கொழும்பு

11 Dec, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கொழும்பு

18 Nov, 2014
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Wembley, United Kingdom

13 Nov, 2024