உலா வரும் போலி கடிதம்: மக்களுக்கு காவல்துறை விடுத்த எச்சரிக்கை!
பொதுமக்களை நிதி ரீதியாக ஏமாற்றும் நோக்கில் சமூக ஊடகங்களில் பரவி வரும் கடிதம் ஒன்று தொடர்பில் சிறிலங்கா காவல்துறை எச்சரிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
"CONVICTION" என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட குறித்த கடிதம், பிரிதி காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பெயரிலும், போலியான கையொப்பத்துடனும் எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், "Cyber Crime Headquarters Colombo, Sri Lanka" என்று குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனத்தால் இந்த கடிதம் வெளியிடப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்ட நிலையில், அவ்வாறு ஒரு நிறுவனம் இலங்கையில் இல்லை என காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
சட்ட நடவடிக்கை
இதேவேளை, சந்தேகத்திற்குரிய கடிதம் பொதுமக்களை நிதி ரீதியாக ஏமாற்றி அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது என்றும் பொதுமக்களை காவல்துறை எச்சரித்துள்ளது.
இதன்படி, குறித்த போலி கடிதத்திற்கு பொதுமக்கள் பலியாக வேண்டாம் என்று வலியுறுத்திய காவல்துறை தவறான தகவல்களைப் பரப்புவதில் ஈடுபட்டவர்கள் மீது தேவையான சட்ட நடவடிக்கை எடுக்க குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளது மேலும் கூறியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
