யாழில் காணாமல் போன மீனவரின் சடலம் மீட்பு!
Jaffna
Death
By Pakirathan
கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மாதகல் கடற்கரை பகுதியிலே குறித்த மீனவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மீனவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மீனவரின் சடலம் மீட்பு

தொழிலுக்குச் சென்ற மீனவர் காணாமல் போனநிலையில், ஏனைய மீனவர்கள் மறுநாள் தேடிய வேளையில் உயிரிழந்தவரின் படகு மாத்திரம் கடலில் கவிழ்ந்த நிலையில் காணப்பட்டதோடு மீனவர் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்தநிலையில், இன்று குறித்த மீனவரின் சடலம் மாதகல் கடற்கரையில் கரையொதிங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி