யாழில் சுகாதார விதிமுறைகளை பேணாத உணவகங்களுக்கு எதிராக அபராதம்!
யாழ்ப்பாணத்தில் சுகாதார விதிமுறைகளை பேணாத உணவகம் மற்றும் பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றுக்கு எதிராக ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
யாழ். வல்வெட்டித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் என்பவற்றில் பொது சுகாதார பரிசோதகர்கள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது, சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத உணவகம் ஒன்றிற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்குப் பதிவு
இதேவேளை, எலி எச்சங்களுடன் உணவுப் பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை மற்றும் மனித நுகர்வுக்கு ஏற்றதல்லாத உணவு பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் மூன்று பல்பொருள் அங்காடிகளுக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகரால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணைகளின் போது உரிமையாளர்கள் தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதையடுத்து, உரிமையாளர்களை கடுமையாக எச்சரித்த நீதிமன்றம், உணவக உரிமையாளருக்கு 50 ஆயிரம் ரூபாயும் , பல்பொருள் அங்காடிகளில் உரிமையாளர்களுக்கு 40 ஆயிரம் , 10 ஆயிரம் மற்றும் 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
