முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து! அதிகரிக்கும் உயிரிழப்புகள்
ஹொரனை - படகொட பகுதியில் உள்ள செனஹாசே கெடெல்லா மௌபியா செவனா முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
தீ விபத்தில் காயமடைந்து ஹொரானை தள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் முதியோர் இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தை ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
மின்கசிவு
அங்கு, முதியோர் இல்லத்தின் தண்ணீர் மோட்டாரிலும், அவ்விடத்தில் இருந்த Multi-plug ஒன்றிலும் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

அவ்விடத்திற்கு அருகில் சுமார் எண்பது மெத்தைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்த மெத்தைகளின் இருப்பு வழியாகத் தீ பரவியதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அந்த இல்லத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் தற்போது காவலில் உள்ளதாகவும், அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |