அதிகாலையில் பற்றியெரிந்த வியாபார நிலையம் - மட்டக்களப்பில் சம்பவம்
accident
fire
Batticaloa
By Vanan
மட்டக்களப்பு மாமாங்கம் 3ஆம் குறுக்கு வீதியில் இன்று அதிகாலை வியாபார நிலையம் ஒன்று தீக்கிரையாகியுள்ளது.
குறித்த வர்த்தக நிலையம் எரிவாயுக் கசிவு காரணமாக தீப் பற்றி உள்ளதாக முதல்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
தீப் பரவல் காரணமாக வியாபார நிலையத்திற்குள் இருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த தீப்பரவல் தொடர்பாக மட்டக்களப்பு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
