மகா கும்பமேளாவில் அடுத்தடுத்து தீ விபத்துகள் : தெய்வாதீனமாக உயிர் பிழைத்த பக்தர்கள்
உத்தரப்பிரதேசத்தின் (Uttar Pradesh) - மகா கும்பமேளா நடைபெறும் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று (07) காலை முகாம் 18வது முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், “12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா ஜனவரி 13ஆம் திகதி ஆரம்பமாகி மகா சிவராத்திரி நாளான 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
திடீரென ஏற்பட்ட தீ விபத்து
இந்த ஆன்மிக நிகழ்வில் உலகம் முழுவதும் இருந்து வரும் கோடிக்கணக்கான பக்தர்கள் நீராடிச் செல்கின்றனர்.
இந்த நிலையில், மகா கும்பமேளாவின் சத்நாக் கேட் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
திறந்தவெளியில் அமைக்கப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட கூடாரங்களில் தீ பரவியதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் உடனடியாக அங்கிருந்த பக்தர்களை வெளியேற்றி, தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர்.
30 பக்தர்கள் பலியாகினர்
சில மணிநேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டதாகவும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஏற்கனவே ஜனவரி மாதத்தில் இரண்டு முறை கும்பமேளா பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் அந்த விபத்துக்களிலும் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 29 ஆம் திகதி கும்பமேளாவில் புனித நீராட கோடிக்கணக்கான பக்தர்கள் கூடிய போது திரிவேணி சங்கமத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 30 பக்தர்கள் பலியாகியதுடன் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
![ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?](https://cdn.ibcstack.com/article/02ea68d2-1a0a-455a-beb8-b3f401d35089/25-67a5ba9954168-md.webp)
ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்? 15 மணி நேரம் முன்
![எமக்குச் சுதந்திரம் மறுக்கப்படும் வரை இந்நாள் கரிநாளே !](https://cdn.ibcstack.com/article/cecc0af8-9c16-41aa-81f4-a89effdfc827/25-67a1daf656617-sm.webp)