கொழும்பில் முதியோர் இல்லத்தில் பாரிய தீ விபத்து : பலர் தீக்குள் சிக்கியுள்ளதாக அச்சம்
Sri Lanka Police
Colombo
Fire
By Jaso
ஹொரணை, பட்டகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் இன்று (03) பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருந்தவர்களில் 44 பேர் இதுவரையில் பாதுகாப்பாகக் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இந்தத் தீ விபத்தில் 11 பேர் தீக்குள் சிக்கியுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தீ விபத்தில் காயமடைந்த முதியோர் இல்லத்தைச் சேர்ந்த 7 பேர் சிகிச்சைக்காகக் கல்பாத மற்றும் ஹொரண வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மூன்று தீயணைப்பு வாகனங்கள் பணியில்
தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி