மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக தீப்பந்த ஆர்ப்பாட்டம் : அரசாங்கம் சுயநலமாக செயற்படுவதாக குற்றச்சாட்டு
இலங்கையில் மீண்டும் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்று ரம்புக்கனை பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தை எதிர்க்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் குறித்த பகுதியில் உள்ள பொது மக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மக்கள் ஏற்கனவே பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், தற்போது மின் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்பட்டமை அவர்களுக்கு பாரிய சுமையாக மாறியுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்கள்
அரச மற்றும் தனியார் துறைகளில் கடமையாற்றுபவர்கள் முதல் சுயதொழில் செய்வோர் உள்ளிட்ட அனைவரும் அரசாங்கத்தின் இந்த பொறுப்பற்ற நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

நாட்டு மக்களின் நிலை குறித்து சிந்திக்காது தற்போதைய சிறிலங்கா அரசாங்கம் செயல்படுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அத்துடன், அரசாங்கத்தின் தவறுகளை தற்போது எந்தவொரு நபராலும் சுட்டிக்காட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எச்சரிக்கை
மக்களின் வாழ்வாதார சுமையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், பொது மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தை விரைவில் நிறைவுக்கு கொண்டு வருவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் மேலும் எச்சரித்துள்ளனர்.
இதேவேளை, தற்போதைய அரசாங்கத்தின் மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக நாடாளாவிய ரீதியில் தீப்பந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 11 மணி நேரம் முன்