மாளிகாவத்தை பகுதியில் கட்டடம் ஒன்றில் தீ விபத்து
Sri Lanka Police
Colombo
Sri Lanka
By Raghav
கொழும்பு (Colombo) - மாளிகாவத்த பிளேஸ் வீதியில் (Maligawatte) பகுதியில் கட்டடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்து இன்று (01) பிற்பகல் 05 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
வியாபார நிலைய கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக அக்கட்டிடத்தின் 2 வது மற்றும் 3 வது மாடி முற்றாக சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தீயணைப்பு வாகனங்கள்
எனினும், தீ விபத்தினால் உயிர்சேதம் எதுவும் ஏற்படாத நிலையில் அங்குள்ள பொருட்களுக்கு பாரியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், 3 தீயணைப்பு வாகனங்கள் விரைவாக செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |










1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்