உள்நாட்டு இறைவரித் திணைக்களக் கட்டடத்தில் தீப்பரவல்
கொழும்பு - கொம்பனித்தெருவில் அமைந்துள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களக் கட்டடத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த திணைக்களத்தின் தலைமை அலுவலக கட்டடத்தில் இன்று (19) இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
திணைக்களத்தின் அன்றாடச் செயற்பாடுகள்
தீ விபத்து ஏற்பட்ட போதிலும், அதன் நிர்வாக மற்றும் அலுவலகச் செயற்பாடுகள் வழமை போல் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அத்திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள மையக் குளிரூட்டும் அமைப்பில் (central air-conditioning system) இந்த சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இந்தச் சம்பவத்தினால் திணைக்களத்தின் அன்றாடச் செயற்பாடுகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் சேவைகளும் நிர்வாக நடவடிக்கைகளும் எவ்விதத் தடையுமின்றி தொடர்ந்து நடைபெறுகின்றன என்று திணைக்களம் மேலும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |