யாழில் மழையுடன் சேர்ந்து விழுந்த மீன்கள்!
கன மழையுடன் மீன்களும் சேர்ந்து விழுந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது.
நாடளாவிய ரீதியில் நிலவி வரும் சீரற்ற காலநிலையுடன் இன்று (21.10.2025) அதிகாலை தொடக்கம் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்திலும் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், இந்த மழையுடன் சேர்ந்து மீன்களும் விழுந்துள்ளன.
சீரற்ற காலநிலை
இவ்வாறு மழையுடன் விழும் மீன்களை பொதுமக்கள் பிடிக்கும் காட்சிகளையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.
இதேவேளை, கடந்த காலங்களிலும் இவ்வாறு பலத்த மழையுடன் மீன்கள் விழுந்துள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த நிகழ்வு, பலத்த காற்றுடன் கூடிய புயல் அல்லது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் போது வானிலை மாற்றங்களால் ஏற்படலாம்.
இவ்வாறு இழுக்கப்பட்ட மீன்கள், மேகங்களுடன் சேர்ந்து வானில் வெகுதூரம் பயணிக்கின்றன.
பின்னர், மழைப்பொழிவின் போது, இந்த மீன்கள் மழையுடன் சேர்ந்து வானத்தில் இருந்து பூமியை நோக்கி விழுகின்றன, இதுவே "மீன் மழை" என்றும் அழைக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



