இலங்கைக் கடற்பரப்பில் மீன் உற்பத்தியில் வீழ்ச்சி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் மீன் உற்பத்தி குறைவடைந்து வருவதாக தேசிய நீர்வாழ் உயிரின வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (NARA) தெரிவித்துள்ளது.
இது இலங்கைக்கு மாத்திரமன்றி உலகின் பல நாடுகளின் சமுத்திரக் கட்டமைப்புகளுக்கும் தாக்கம் செலுத்தியுள்ள பொதுவான அபாயம் என்று அதன் தலைவர் சனத் ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலைமை திடீரென உருவானது அல்ல எனவும், 2014 ஆம் ஆண்டு முதல் இலங்கையை அண்டிய கடற்பரப்பில் மீன் உற்பத்தியில் வீழ்ச்சி பதிவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிட சர்வதேச இராஜதந்திரிகளுக்கு அனுமதி மறுப்பு : சிறீதரன் எம்.பி குற்றச்சாட்டு
எல் நினோ நிலைமையின் தாக்கம்
அவர் மேலும் தெரிவிக்கையில், மீன் உற்பத்தி குறைவடைந்தமைக்குக் குறிப்பிட்ட எந்தவொரு காரணமும் தாக்கம் செலுத்தவில்லை, உயிரியல் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்களே பிரதான காரணமாகியுள்ளன.

எனினும், இதற்காக எல் நினோ (El Niño) நிலைமையின் தாக்கம் உள்ளதா என்பது இதுவரை குறிப்பாக அடையாளம் காணப்படவில்லை, அதனால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த நெருக்கடி நீண்டகாலமாக வளர்ச்சியடைந்தால் கடற்றொழில் மக்களின் ஜீவனோபாயத்தைப் பாதுகாப்பதற்காக அவர்களை வேறு தொழில் வாய்ப்புகளை நோக்கி மாற்றியமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மீன் வளர்ப்பிற்கான விசேட வேலைத்திட்டம்
இதற்குத் தீர்வாக மீன் வளர்ப்பிற்கான விசேட வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், தற்போதைய முன்னேற்றம் தொடர்பில் திருப்தியடைய முடியாது.” என தெரிவித்தார்.

இதேவேளை, கடற்பரப்பில் சட்டவிரோத வலைகள் மற்றும் அழிவை ஏற்படுத்தும் உபகரணங்களின் பயன்பாட்டிற்கு எதிரான சட்டங்கள் சரிவர நடைமுறைப்படுத்தப்படாததே மீன் வளம் குறைவடைவதற்கு முக்கிய காரணம் என தேசிய கடற்றொழிலாளர் ஒத்துழைப்பு இயக்கத்தின் அழைப்பாளர் ஹெர்மன் குமார குற்றஞ்சாட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |