தர வரிசையில் கீழ் இறங்கிய இலங்கை! கடன்களை செலுத்த முடியாத நிலைமை - வெளிவந்த சர்வதேச மதிப்பீடு
வெளிநாட்டு கடனை மீள செலுத்துவதற்கு இலங்கைக்கு காணப்படுகின்ற இயலுமை தொடர்பில் ஃப்ட்ச் ரேட்டிங் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான ஃப்ட்ச் ரேட்டிங் நிறுவனம், இலங்கையை தர வரிசையிலிருந்து ஒரு படி குறைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஃபிட்ச் மதிப்பீடுகள் இலங்கையின் நீண்ட கால வெளிநாட்டு நாணய வழங்குநர் இயல்புநிலை மதிப்பீட்டை (IDR) ´CCC´ இலிருந்து ´CC´ க்கு குறைத்துள்ளது.
இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு கடைசி மதிப்பாய்வில் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக குறைந்துள்ளது.
அதிக இறக்குமதி கட்டணம் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணய தலையீடு ஆகியவற்றின் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு ஓகஸ்ட் மாதத்தில் இருந்து சுமார் USD 2 பில்லியன் வரை குறைந்துள்ளது. நவம்பர் இறுதியில் USD 1.6 பில்லியனாகக் குறைந்துள்ளது.
இது ஒரு மாதத்திற்கும் குறைவான தற்போதைய வெளி கொடுப்பனவுகளுக்கு (CXP) சமமானதாகும்.
இது 2020 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சியைக் குறிக்கிறது.