கடன் தரப்படுத்தலில் தரமிறக்கப்பட்ட இலங்கை - திருத்தப்பட்ட புதிய அறிவிப்பு வெளியானது...
சர்வதேச கடன் தரப்படுத்தலில் இலங்கையை 'சிசிசி' நிலையிலிருந்து 'சிசி' நிலைக்குத் தரமிறக்கிய 'ஃபிட்ச் ரேட்டிங்' தரப்படுத்தல் முகவர் நிறுவனம் திருத்தப்பட்ட புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த நிறுவனம் இப்புதிய அறிவிப்பை கடந்த திங்கட்கிழமை (17) வெளியிட்டுள்ளது.
அதில், இலங்கையின் கையிருப்பில் மற்றும் வெளிநாட்டு நாணயமாற்று இருப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, வெளியகக் கடன்களை மீளச்செலுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல், எதிர்பார்க்கப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சி உள்ளடங்கலாகப் பல்வேறு காரணங்களால் இலங்கையை 'சிசி' நிலைக்குத் தரமிறக்குவதாக ஃபிட்ச் ரேட்டிங் விளக்கமளித்துள்ளது.
சர்வதேச ரீதியில் இயங்கும் மூன்று முக்கிய கடன் தரப்படுத்தல் நிறுவனங்களில் ஒன்றான அமெரிக்காவின் நியூயோர்க்கை தளமாகக் கொண்டியங்கும் 'ஃபிட்ச் ரேட்டிங்' தரப்படுத்தல் முகவர் நிறுவனம் இலங்கையை 'சிசிசி' நிலையிலிருந்து 'சிசி' நிலைக்குத் தரமிறக்குவதாக கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.