ஐந்து போத்தல் சாராயத்திற்கு பதில் ஐந்து லீற்றர் பெட்ரோல் -இது இலங்கையில்
சாராயத்திற்கு பதில் பெற்றோல்
ஐந்து லீற்றர் பெட்ரோலுக்காக ஐந்து போத்தல் மதுபானங்களை பரிமாறிய நபர் தொடர்பான தகவல் ஒன்று இலங்கையில் பரவியுள்ளது.
சிறு இரத்தின கல் வியாபாரி ஒருவர் தனது காரில் ரக்வானா நகருக்கு வந்திருந்தார். பின்னர், தனது காருக்கு ஐந்து லீட்டர் பெட்ரோலை வாங்க முயன்றபோது, சில இளைஞர்களைச் சந்தித்தார். குறித்த வர்த்தகர் இளைஞர் குழுவிடம் அதிக விலைக்கு எரிபொருளை வழங்குமாறு கூறினார்.
வர்த்தகரின் கோரிக்கையை ஏற்ற இளைஞர்குழு
எனினும் இரவு நேரமாகிவிட்டதால் 5 போத்தல் சாராயத்தை வாங்கி, அதற்கு பதிலாக ஐந்து லீட்டர் பெட்ரோல் கொடுங்கள் என்று தொழிலதிபர் கேட்டுள்ளார்.
வர்த்தகரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இளைஞர்குழு, சட்டவிரோதமாக எரிபொருள் விற்பனை செய்யும் நபரை சந்தித்து ஐந்து லீற்றர் பெட்ரோலை வழங்கியதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
சிறப்புச் செய்திகள்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இரத்தத்தில் எழுதப்பட்ட புதிர்
4 நாட்கள் முன்