காலி மாநகர சபையில் குழப்பம் : பெண் உறுப்பினர் உட்பட ஐவர் கைது
Sri Lanka Police
Galle
Sri Lanka Politician
Arrest
By Sumithiran
காலி மாநகர சபையில் ஐந்து உறுப்பினர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (30) சபை அமர்வில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர், ஒரு பெண் உறுப்பினர் உட்பட ஐந்து உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடமைகளுக்கு இடையூறு
சபை செயலாளர் மற்றும் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி (UNP), ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களே கைது செய்யப்பட்டவர்களாவார்.இவர்கள் இன்று (31) காலி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்