அம்பாறையில் ஐந்து மோட்டார் குண்டுகள் மீட்பு...!
Sri Lanka Police
Ampara
Sri Lanka Police Investigation
By Shalini Balachandran
அம்பாறையில் ஐந்து மோட்டார் குண்டுகள் துருப்பிடித்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த குண்டுகள் நேற்றைய தினம் (20-05-2026) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் காவல் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு குளத்திற்கு அருகில் இவை மீட்கப்பட்டுள்ளன.
யுத்த காலம்
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மீட்கப்பட்டுள்ள இக்குண்டுகள், கடந்த யுத்த காலத்தில் பயன்படுத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மீட்கப்பட்டுள்ள குண்டுகள் தொடர்பில் திருக்கோவில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மீட்கப்பட்ட குண்டுகளைச் செயலிழக்கச் செய்வதற்காக விசேட அதிரடிப்படை பிரிவினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
உலக இராணுவ வரலாற்றில் பால்ராஜ் ஒரு போரியல் அதிசயம்! ஒரு போர்க்கள ஒப்பீடு 14 மணி நேரம் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி