தமிழர் தலைநகரில் சுட்டுக் கொல்லப்பட்ட பல்கலை மாணவர்கள் : 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு
Trincomalee
By Sumithiran
திருகோணமலை(trincomale) கடற்கரைப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களின் 19ம் ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம்(02) இடம்பெற்றது.
2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி மாலை திருகோணமலை கடற்கரை பகுதியில் பொழுது போக்கிற்காக கூடியிருந்த ஐந்து மாணவர்களும் காந்தி சிலை சுற்று வட்டத்திற்கு அருகாமையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஐந்து மாணவர்கள் சுட்டுக்கொலை
இச்சம்பவத்தின் போது லோகிதராசா ரொகான்,சண்முகராஜா சஜீந்திரன், மனோகரன் வசீகர், தங்கத்துரை சிவானந்தன், யோகராஜா கேமச்சந்திரன் ஆகிய மாணவர்களே சுட்டுக் கொல்லப்பட்டவர்களாவர்.
குறித்த சம்பவம் இடம்பெற்று 18 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் அவர்களை நினைவு கூரும் முகமாக திருகோணமலை வாழ் பொது மக்களால் ஒன்றிணைந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்
2 வாரங்கள் முன்விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்