முக்கிய இரு நாடுகளுக்கு இடையிலான விமான சேவைகள் ரத்து!
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக ஜெட் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால், அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையேயான பல உள்நாட்டு மற்றும் நேரடி விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, மே மாதத்தில் சுமார் 12% விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மாற்று விமானங்கள்
அதன்போது, ஆக்லாந்து - கிறிஸ்ட்சர்ச், வெலிங்டன், சிட்னி மற்றும் பிரிஸ்பேனுக்கும் இடையேயான விமானங்களே ரத்து செய்யப்பட்டடுள்ளன.

இருப்பினும், பல பயணிகளுக்கு மாற்றாக அதே நாளில் மற்றொரு விமானம் வழங்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு விமான நிறுவனங்கள் வருத்தம் தெரிவித்து, அவர்களுக்கு நன்றியும் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு விமான அட்டவணை
எரிபொருள் விலை மற்றும் எரிபொருள் பெறுவதில் உள்ள சிரமங்கள் காரணமாக, வியட்நாம் ஏர்லைன்ஸ் நிறுவனமும் வாரத்திற்கு சுமார் 24 உள்நாட்டு விமானங்களை ரத்து செய்துள்ளது.

இதற்கிடையில், மியான்மர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் தங்களது உள்நாட்டு விமான அட்டவணைகளைக் குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |