ஈரானியர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்திய முக்கிய நாடு!
ஈரானியர்களுக்கு வழங்கப்படும் சுற்றுலா விசாக்களை தற்காலிகமாக நிறுத்துவதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த தீர்மானத்தை அந்நாட்டின் உள்துறை அமைச்சர் டோனி பர்க் அறிவித்துள்ளார்.
ஈரானிலிருந்து வரும் சில தற்காலிக பயணிகள், விசா காலாவதியான பின் நாட்டை விட்டு வெளியேறாமல் இருக்கக்கூடும் என்ற அச்சம் உள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய நலன்
இந்தத் தடை நாளை(26) வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு, அடுத்த ஆறு மாதங்கள் வரை நீடிக்கப்படும் என டோனி பர்க் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், நீண்டகால விசா பெற்ற ஈரானியர்கள் அல்லது அவுஸ்திரேலியாவில் குடும்பத்தினர் (மனைவி, குழந்தைகள்) உள்ளவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
உலகளாவிய சூழ்நிலைகள் வேகமாக மாறி வரும் நிலையில், நாட்டின் தேசிய நலனை கருத்தில் கொண்டு அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர்களின் பிரச்சினையை 1965இல் ஏற்றுக்கொண்ட டட்லி செல்வா ஒப்பந்தம்… 23 மணி நேரம் முன்