இலங்கையில் கடலில் மிதக்கும் ஹோட்டல்...! பிரதி அமைச்சர் தகவல்
களு கங்கையிலும் கடலிலும் மிதக்கும் ஹோட்டல்களை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறித்த விடயத்தை பிரதி அமைச்சர் நளின் ஹேவகே (Nalin Hewage ) தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இதற்காக சவுதி அரேபியாவிலிருந்து ஒரு முதலீட்டாளர் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலா ஆணைக்குழு
அத்துடன், சுற்றுலாக் கைத்தொழிலுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைத்து தேசிய சுற்றுலா ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாப் பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடக கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இவ்வாண்டில் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டிக்கு அழைத்து வருவதற்கு எதிர்பார்க்கப்படுவதடன் எதிர்காலத்தில் சுற்றுலாத் துறையில் மாற்றங்கள் பலவற்றை மேற்கொள்ள உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாப் பயணிகள் வருகை
இதேவேளை, இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் மாத்திரம் 229,298 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மார்ச் மாதத்தில் 01 ஆம் திகதி முதல் 07 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அதிகபட்ச சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளது.
குறித்த காலப் பகுதியில் 53,113 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. அத்துடன் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் இந்தியா (India) 39,212 சுற்றுலாப் பயணிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
