சைகையில் மாத்திரம் பேசும் மக்களை கொண்ட கிராமம் பற்றி தெரியுமா!
துருக்கியிலுள்ள (Turkey) ஒரு கிராமம் அறிவியலாளர்களை மிக குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
குறித்த கிராமத்தில் வாழ்பவர்களில் 50 சதவீதமானவர்களுக்கு காது கேட்காது என்பதுடன் அவர்களால் பேசவும் முடியாது.
துருக்கியிலுள்ள கோகோவா (Gokova) என்னும் கிராமத்தில் வாழும் மக்களுக்கே இவ்வாறான ஒரு புது வித பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
புது வித பிரச்சினை
இந்நிலையில், அந்த கிராமத்தில் வாழும் பெரும்பாலானோர் சைகை பாஷையை பயன்படுத்துவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இவ்வாறு, ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு வெளியாட்களே வராததால், தங்களுக்குள்ளேயே திருமணம் செய்துகொள்வது தான் காரணம் என சிலர் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், மற்றும் சிலர் , இரும்பு, ஆர்சனிக் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளால் ஏற்படும் தண்ணீர் மாசுபாடு காரணமாக அந்த மக்கள் பல தலைமுறைகளாக பாதிக்கப்பட்டுள்ளதுதான் அவர்களுடைய பிரச்சினைக்கு காரணம் என்கிறார்கள்.
ஒவ்வொரு முறை கிராமத்தில் குழந்தை பிறக்கும்போதும், அது காதுகேட்காத, வாய் பேசாத குழந்தையாக இருந்துவிடக்கூடாதே என மக்கள் அச்சம், கவலையுடன் காத்திருப்பதே வழக்கமாகிவிட்டது என்று கூறும் அந்த கிராமத்தவர் ஒருவர், அந்த காத்திருப்பு வலி மிக்கது, மரணம் போல் கொடியது என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
