பரவலடையும் மர்மக் காய்ச்சல்...உலக நாடுகள் முடங்கும் அபாயம் நிபுணர்கள் எச்சரிக்கை!
மர்ம காய்ச்சல் ஒன்று பரவி வருவதாகவும் இது, இதுவரை பெயரிடப்படாத நோய் என்றும் இதனால் உலக நாடுகள் மொத்தமாக முடங்கும் அபாயம் இருப்பதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தொற்று நோய்கள் தொடர்பில் ஆய்வு முன்னெடுக்கும் உலகளாவிய அமைப்பு ஒன்றே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது, கொரோனாவைப் போன்ற ஒரு மிக நெருக்கடியான சூழலை வெறும் காய்ச்சல் உருவாக்க இருப்பதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இதுவரை பெயரிடப்படாத இந்த நோய் பெருந்தொற்றுக்கான அறிகுறிகளுடன் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். 57 நாடுகளை சேர்ந்த உலகளாவிய தொற்று நோய் தொடர்பான நிபுணர்கள் 187 பேரின் ஆய்வுகளில் இருந்து இது தொடர்பான அறிக்கை ஒன்றும் வெளியாகியுள்ளது.
மொத்தமாக முடங்கும்
இந்த மர்மக் காய்ச்சல் மக்களை பாதிக்கவிருக்கும் அடுத்த மிகப்பெரிய தொற்று என்றும், இந்தக் காய்ச்சலினால் கொரோனா போன்று உலக நாடுகள் மொத்தமாக முடங்கும் ஆபத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு அடுத்த நிலையில் தொற்று எக்ஸ் இருப்பதாகவும் நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர். ஜேர்மனியை சேர்ந்த நிபுணர் ஒருவர் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், "ஒவ்வொரு குளிர் காலத்திலும் உலக மக்கள் காய்ச்சலால் அவதிப்படுவது, ஒருவகை சிறிய பெருந்தொற்று தான்.
நிரந்தர தீர்வு
ஒவ்வொரு ஆண்டும் குளிர் காலத்தில் மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு இதுவரை நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை என்றாலும் ஒவ்வொரு ஆண்டும் தடுப்பூசியின் தரத்தை மாற்றிக்கொள்வதுடன், வாழ்க்கையில் பல முறை குளிர் காய்ச்சலால் ஒவ்வொருவரும் பாதிக்கப்படுகின்றனர்.
ஆனால், இந்த காய்ச்சல் அதிக வீரியம் கொண்டதாக மாறும் போது மொத்த கட்டுப்பாடும் மீறிவிடும் வாய்ப்பு இருப்பதாகவும் அது பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்" என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |