2023 ஆம் ஆண்டில் வட்டி வீதங்கள், பணவீக்கத்தை குறைப்பதில் கவனம்
இலங்கையில் 2023 ஆம் ஆண்டில் வட்டி வீதங்கள் மற்றும் பணவீக்கத்தை குறைப்பதில் கவனம் செலுத்துவதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் உள்ள தலாதா மாளிகைக்கு இன்று விஜயம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆளுநர் நந்தலால் வீரசிங்க, பணவீக்கத்தை குறைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பலன்களை தாங்கள் ஏற்கனவே பார்த்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
பணவீக்கம்
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “இலங்கையில் பணவீக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. அது மேலும் குறையும்.
பணவீக்கத்தைக் குறைப்பதற்கு மேலதிகமாக வட்டி வீதங்கள் குறையும் பட்சத்தில், மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மேலும் குறையும்.
அரசாங்கம் ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் அளவிலான ஒப்பந்தத்தை எட்டியுள்ளது. நிதியத்தின் நிறைவேற்று சபையின் அங்கீகாரத்திற்காக காத்திருக்கிறோம்” - என்றார்.
பொருளாதார மீட்பிற்கான நிதி உதவி
இந்த வருடத்தின் முதல் காலாண்டில் சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார மீட்பிற்கான நிதி உதவியை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
