இந்தியா, பாகிஸ்தானிடம் சிறிலங்கா விடுத்துள்ள கோரிக்கை
srilanka
india
pakistan
loan
By Sumithiran
அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன’(Bandula Gunawardena) இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் கடன் கோரியுள்ளார்.
அந்தந்த நாடுகளின் வர்த்தக அமைச்சர்களுடன் ஏற்கனவே கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
அரிசி, பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களை இலங்கை, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து கொள்வனவு செய்கிறது.
எதிர்காலத்தில் நாட்டில் பஞ்சம் ஏற்படும் என பல்வேறு தரப்பினரும் எச்சரிக்கை விடுத்து வரும் நிலையிலேயே இவ்வாறு கடன் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி