எதிர்வரும் பெரும்போகம் தோல்வியடைந்தால் நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் - மஹிந்த அமரவீர

Mahinda Amaraweera Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lanka Food Crisis Ministry of Agriculture
By Beulah Jul 30, 2023 11:13 AM GMT
Report

தற்போது நிலவும் வரட்சி காரணமாக எதிர்வரும் பெரும்போகம் தோல்வியடைந்தால் நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில்,உடவலவ நீர்த்தேக்கத்தின் கீழ் பயிரிடப்பட்டிருந்த 50,000 ஏக்கருக்கும் அதிகமான நெற்செய்கைகள் இந்த நாட்களில் நிலவும் கடும் வரட்சி காரணமாக அழிவடையும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த வயல்களுக்கு சமனல குளத்தில் இருந்து நீரை விநியோகிப்பது தொடர்பாக அண்மையில் மின்சார சபையின் பிரதிநிதிகளுக்கும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

தென்மாகாணத்தில் மின்சாரம் துண்டிக்கப்படும்

எதிர்வரும் பெரும்போகம் தோல்வியடைந்தால் நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் - மஹிந்த அமரவீர | Food Shortage Sl Agriculture Mahinda Amaraweera

சமனல குளத்திலிருந்து 10 நாட்களுக்கு உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் திறந்து விடப்பட்டால் தென் மாகாணத்தில் 1 மணித்தியாலம் முதல் 03 மணித்தியாலங்களுக்கும் இடையில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டி ஏற்படும் என மின்சார சபை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கால்நடைத் தீவனம் மற்றும் எத்தனோல் உற்பத்தி

எதிர்வரும் பெரும்போகம் தோல்வியடைந்தால் நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் - மஹிந்த அமரவீர | Food Shortage Sl Agriculture Mahinda Amaraweera

இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

"மக்களுக்கு உணவளிப்பது பற்றி பேச வேண்டும். அரசாங்கத்திடம் அரிசி தொகை இல்லை, நெல் கையிருப்பும் இல்லை.

ஒவ்வொரு நாட்டிலும் அரிசி இருப்பு இருக்க வேண்டும். ஆனால் நம் நாட்டில் அதை வைத்திருக்க பணம் இல்லை.

ஏனென்றால். நாம் வங்குரோத்து அடைந்த நாட்டில் இருக்கிறோம், அப்படி கூறி மக்களை பட்டினியால் மரணிக்க விட முடியாது.

அதனால்தான் இந்த சவாலை நாம் அனைவரும் புரிந்துகொண்டு, இப்போது தண்ணீர் இருக்கும் இடத்தில் எதையாவது வளர்க்க கடினமாக உழைக்க வேண்டும்.

சோறு இல்லை என்றால் இருப்பதையாவது சாப்பிட வேண்டும் அல்லவா" என்றார்.

தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு கால்நடைத் தீவனம் மற்றும் எத்தனோல் உற்பத்திக்கான அரிசி விநியோகத்தை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார். 

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025