மட்டக்களப்பிற்கு படையெடுக்கும் வெளிநாட்டு பறவைகள்
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பெரு நிலப்பரப்பின் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் தற்போது பெரும்போக அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வயல் நிலங்களில் அதிகளவு வெளிநாட்டுப் பறவைகள் இரை தேடி வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது.
வெளிநாட்டுப் பறவைகள் உள்நாட்டுக்கே உரித்தான கொக்கு, மைனா, நாரைக்கொக்கு, ஆள்காட்டி, உள்ளிட்ட பல பறவைகளுடன் இணைந்து கூட்டம், கூட்டமாக வயல் நிலங்களில் இரை தேடி வருவதையும், அவதானிக்க முடிகின்றது.
பார்ப்பதற்கு அழகாக
பல வர்ணங்களுடன் பார்ப்பதற்கு அழகாகக் காட்சி தரும் பறவைகளை அப்பகுதி மக்கள் கண்டு இரசித்து வருகின்றனர்.
“வலசை வரும் பறவைகள்”
பூகோள ரீதியில் வட துருவத்திலிருந்துதான் அதிக பறவைகள் வருகின்றன. இதனை இடம்பெயரும் பறவைகள் என அழைப்பதில்லை அதனை “வலசை வரும் பறவைகள்” என அழைக்கப்படுகின்றன.
இவ்வாறு பறவைகள் மாத்திரமல்ல வண்ணாத்துப்பூச்சி, சிங்கறால், திமிங்கலம், நீலத்திமிங்கலம், உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்களும் வருகின்றன.
சூழலியலாளர்களின் கருத்து
இது வருடாந்தம் நடைபெறும். இது பலநூற்றாண்டு காலமாக இடம்பெற்று வருகின்றது.
இது சூழல் வெப்பநிலைக்கு உள்ள பிராணிகளாகவும், இளஞ்சூட்டுக்குருதியுள்ள பிராணிகளாகவும், தங்களுடைய வெப்ப நிலையை தாங்களே உணரக்கூடியதாக உள்ளதாக சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |